Poongatru Puthithanathu | பூங்காற்று புதிதானது

By Admin - 09 Oct 2026 26 0

ஷேர் ஆட்டோவில் இளையராஜாவின், 

கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்(லா லா ள லல லா)
இவைகள் இளமாலை பூக்களே(லா லா ள லல லா)
புதுச்சோலை பூக்களே(லா லா ள லல லா)
கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

பாட்டு ஓடிக்கொண்டிருக்க நான் எங்கோ தொலைந்தது போல அங்கு வேகமாய் ஓடி கொண்டிருந்த கடைகளை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஆட்டோ டிரைவர் சடாலென்று பிரேக் போட்டார் நிலைகுலைந்து எதிரில் உட்கார்ந்திருந்த பாட்டியின் நெஞ்சின் மீது மோதி கிழே விழுந்தேன்! அம்மா என்று ஒரு வார்தையை உரக்க கத்தி பாட்டி கண் நிலைகுத்தி சட்டென்று கிழே என் மீது விழுந்தார்!! 

நான் பாட்டி பாட்டி என்று கத்தி எழுப்ப முயன்றும் எந்த ஒரு பயனும் இல்லை. பாட்டி நிலைகுத்தியது போல என்னை பார்த்துக்கொண்டிருந்தார், பாட்டி நம்மை விட்டு பரலோகம் போய் சேர்ந்துவிட்டாள் என்பது உறுதியானது. நொடிகளில் கூட்டம் சேர்ந்தது. போலீஸ் வந்தது. இம்முறை ரேடியோவில்,

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு

ஒலித்துக்கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் மாதவி அந்த அழகான போலீஸ் யூனிபார்மில் அழகு பதுமை தேரிலிருந்து இறங்குவது போல ஜீப்பில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள். அந்த நொடியில் என் காதில் பாட்டின் மீதி வரிகள் என்னோடு சேர்ந்து அவளை பார்த்து,

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

என்று மனதிற்குள் பாடிக்கொண்டிருந்தது! அவள் நேரே என் முன்னே வந்து நின்றாள் நான் அவளை பார்த்து 

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் தெரிவது விடுகதையோ
ஸ க ரி க ம ப த நி
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே

என்று மீதி பாடலை பாட பாளர் என்ற சத்தம் மட்டும் கேட்டது, இடது கன்னம்மும் காதும் சிவந்து இருக்க நான் போலீஸ் ஸ்டேஷனில் சட்டையும் பேண்ட்டும் இல்லாமல் வெறும் ஷார்ட்ஸ் ஓட உட்கார்ந்திக்க அங்கு ஆபீசர்களுடன் பேசிக்கொண்டிருந்த மாதவியின் அழகு மட்டும் என்னை விடவில்லை, போலீஸ் ஸ்டேஷன் ரேடியோவில் மீண்டும் இளையராஜா, 

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம்
நீ தான் பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம்
வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு
உண்டானதே

அவள் என்னை பார்த்து ஓடி வருவது போல கனவு காண்கிறேன் என்று நினைத்தேன் பிறகு தான் தெரிந்தந்து அவள் நிஜமாகவே என்னை பார்த்து தான் ஓடி வருகின்றாள், வந்தவள் நேர என் மூல முக்கியப்பகுதியில் அவள் கால்களை தூக்கி மாறி மாறி இரு கிக் அடித்தாள் பாருங்கள் என் கண்கள் கலங்கி கண்ணீர் பெருகெடுத்து ஓடியது! எதற்காக அடிவாங்குகிறோம் என்று தெரியாமல் அவளை பார்த்து என் முதல் கேள்வியை கேட்டேன், 

எதுக்கு மேடம் அடிக்குறீங்க? நான் என்ன பண்ணேன்?

அவள் என்னை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டோ டிரைவர் திடீர்னு பிரேக் போட்டான் நான் நிலை தடுமாறி அந்த பாட்டி மேல போய் விழுந்துடேன்!! பாட்டி செத்துட்டா!! 

என் முகத்தில் எந்த ஒரு குற்றுணர்ச்சி இல்லாத ஒரு மெல்லிய சிரிப்பு மேலெழுந்தது!!

அவள் என்னை கோபமாக பார்த்து, என் கழுத்தை பிடித்து செவிரின் மீது சாய்த்து காதோரமாக,

பிளடி ஃபூல் அந்த பாட்டி சாகல டா இடியட்! ஒரு சின்ன வேலை அதை கூட உன்னால ஒழுங்க பன்ன முடியல அதுவும் ஒரு பாட்டிய இதுல அசாஸின்னு பீத்திக்குறது வேற! ஒழுங்கா ராயபுரம் சுப்ரமணி கிட்ட சொல்லிருந்தா அவன் அவன் சிம்பிள் ஆ பாட்டிய பைக் ஆக்ஸிடென்ட்ல முடிச்சிருப்பான்! அவன் கொடைக்கானல் ட்ரிப் போனதால, ச்ச உன்ன நம்பி! ஒரு கோடி இன்சூரன்ஸ் வேஸ்டா போச்சு!!

மறு நொடி அவமானத்தில் வெக்கி தலை குனிந்து ஷாக்கில் செவுறு மீது சாய்ந்து உறைந்து போய் கிழே சாய்ந்து உட்கார்ந்தேன்! முதல் முறை தோற்ற அந்த கோபத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. 

அவள் கோபமாக என்னை ஏறெடுத்து வெறுப்பாக பார்த்தாள்,

இதுல ஐயாவுக்கு காதல் வேற! 

நான் அவளை ஏறெடுத்து பார்த்தேன்! 

ஒரு எளனச் சிருப்புடன் என்னை பார்த்து,

ஒரு நாள் உன்கூட படுத்தா காதல்ன்னு சொல்லுவியா? அப்படி பார்த்தா நான் வாரவராம் காதலிக்கணும்! 

அப்பொழுது கூட அவள் மீது எனக்கு கோபம் வரவில்லை, அவள் என்னை பார்த்து,

கேஸ் எல்லாம் போடல! சாரின்னு ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டு கிளம்பி போய்கிட்டே இரு! பாஸ்கிட்ட நான் பேசிக்குறேன்!  

மீண்டும் இளையராஜா ரேடியோவில், 

பூங்காற்று புதிதானது…

புதுவாழ்வு சதிராடுது…

இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…

உயிரை இணைத்து விளையாடும்…

எனக்குள் ஒரு கோபம் எழுந்தது அந்த கோபத்தில் எழுந்து ஓடி போய் மாதவியை கட்டி பிடித்து அவள் உதட்டோரம் ஒரு முத்தம் கொடுத்து அவள் கண்களை நேரே பார்த்து,

ஐ லவ் யூ மாதவி 

என்று கூறி கொண்டே அவள் ரிவால்வரை அவளது பெல்ட்டிலிருந்து எடுத்து என் நெற்றி பொட்டில் வைத்து அவள் முன்னாள் நின்று மீண்டும் ஒரு முறை சத்தமாக அவளை பார்த்து,

ஐ லவ் யூ மாதவி 

என்று கூறி ரிவால்வரை…

பூங்காற்று புதிதானது…

புதுவாழ்வு சதிராடுது…


சிவராஜ் பரமேஸ்வரன் 

Add Your Comments

Say Something

 

Comments

No comments.